திருமணமான 2 நாட்களில் விவாகரத்து யோகம்!

மனைவியை திருமணமான 2 நாட்களில் விவாகரத்து செய்த கணவர் – காரணம் ?…
மனாமா:-சவுதி செய்தி இணையதளம் அல் மர்ஷாத் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து உள்ளார். திருமணம் செய்த முதல் நாள் முதல் இரவின் போது அவரது வீட்டில் உள்ள திரைசீலைகள் அனைத்தும் கீழே வீட்டிற்கு வெளியே விழுந்து உள்ளது. முதல் முறையாக வெளியே இரவு உணவு சாப்பிட சென்று இருந்த போது அவர்களுக்கு பரிமாற வநத சர்வர் வழுக்கி கீழே விழுந்து உள்ளார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் வீடு முழுவதும் ஒரே வாசனையாக இருந்து உள்ளது. அப்போது மனைவி செண்ட் பாட்டிலை தவற விட்டதால் அது உடைந்து இந்த வாசனை வீடு முழுவதும் வந்து உள்ளது என கணவர் கண்டறிந்து உள்ளார். இதை தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்ய அவர் முடிவு எடுத்து உள்ளார். உடனடியாக புது மனைவியின் வீட்டிற்கு சென்ற அவர் மனைவியின் பெற்றோர்களிடம் உங்கள் மகளை விவாகரத்து செய்யப்போவதாக கூறி உள்ளார். தனது திருமணத்திற்கு பிறகுதான் இவ்வாறான செயல்கள் நடப்பதாக அந்த மூட நம்பிக்கை கொண்டவர் எண்ணி உள்ளார். தனது மனைவிக்கு துரதிர்ஷ்டம் இருப்பதாக கருதி உள்ளார். என அதில் கூறப்பட்டு உள்ளது. இவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.