லண்டன் மாநகரை அணு குண்டு
பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் லண்டன் மாநகரை அணு குண்டு வீசி தகர்க்க ரஷ்யா சதி திட்டத்தை தீட்டியதாக பிரித்தானியாவின் முதல் அணுகுண்டை உருவாக்க உதவிய நிபுணர் William Penney தாம் 1954-ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, லண்டன் மாநகரின் 3 முக்கிய பகுதிகளான Croydon, Uxbridge, and Romford ஆகிய இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமிட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அப்போதைய அணுசக்தி துறை தலைவரான Edwin Plowden என்பவரை எச்சரித்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா திட்டமிட்டபடி செயல்படுத்தி இருந்தால் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியில் இருந்து 3 மைல்கள் தூரம் வரை ஒட்டுமொத்தமாக 30 மைல்கள் சாம்பலாக மாறியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா பயன்படுத்த திட்டமிட்டுருந்த அணுகுண்டுகள் ஜப்பானில் வீசப்பட்ட அணு குண்டுகளை விட சக்தி வாய்ந்தவை எனவும் அந்த கடிதத்தில் Penney குறிப்பிட்டுள்ளார்.
William Penney தம் கைப்பட எழுதிய இந்த கடிதம் முதன் முறையாக தேசிய ஆவணக்காப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், பனிப்போர் காலத்தில் தீட்டிய சதி திட்டம் குறித்த பார்வை பிரித்தானியாவின் அணு ஆயுத கொள்கை குறித்த தற்போதைய விவாதத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.