இராகு கேதுக்கள் முதலில்...
தன்னுடன் இணைந்த கிரகம், பிறகு
தான் இருக்கும் வீட்டின் அதிபதி, அடுத்து
தன்னைப் பார்த்த கிரகம், பின்னர்
தான் பெற்ற சாரநாதன்,
இறுதியாக
தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை
அல்லது
தான் சாரமளித்த கிரகங்களின் தன்மை
என்ற வரிசைப்படியே தனது தசையில் பலன்களைச் செய்கின்றன.
மற்ற கிரகங்களின் இருப்பை நாம் எப்போதும் உணருகின்றோம். அவற்றை வெறுங்கண்ணால் பார்க்கவும் செய்கின்றோம் எனும் நிலையில் இராகு கேதுக்களை நாம் கிரகண காலங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
இன்னொரு வினோத விளைவாக திருக்கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கியப் பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதத்தில் பெரும்பாலானோரை திருக்கணிதத்தின் பக்கம் சாய வைத்ததும் இந்த இராகு கேதுக்கள் தான்.
எப்படி எனில் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகங்கள் அமைந்திருக்கும் டிகிரி அளவில் சில வித்தியாசங்கள் உள்ளன. இவற்றில் எது சரி என்பதைச் சரி பார்க்க, சாதாரண மனிதராகிய நாம் மகாவிஷ்ணுவைப் போல விஸ்வரூபம் எடுத்து வானத்துக்கு மேலே நின்று பார்த்துத்தான் கிரகங்களின் சரியான இருப்பிடத்தை அடிக்கணக்கில் துல்லியமாக அளவெடுக்க முடியும்.
ஆனால் சூரிய சந்திரர்களை மறைக்கும் இராகு கேதுக்களின் இருப்பு சிறிது மாறினாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் வராது என்பது உண்மை.
இதன் அடிப்படையில் வாக்கியப் பஞ்சாங்க கணிப்புகள் சிறிது பிசகுவதால் சமீபத்திய வருடங்களில் திருக்கணித கிரகண நேரத்தையே வாக்கியப் பஞ்சாங்கங்கள் எடுத்து வெளியிடுகின்றன.
மேலும் அஷ்டமாதிபத்தியம் பெற்ற பாபக் கிரகங்களின் இணைவைப் பெற்ற நிழல் கிரகங்கள் அல்லது எட்டாமிடத்தில் இருந்து பாப கிரகங்களின் இணைவைப் பெற்ற இராகு கேதுக்கள் ஆகிய இரண்டு நிலையும் மிகக் கடுமையானவை.
இந்த அமைப்பில் இருக்கும் இராகு கேது தசைகள் மிகவும் மோசமான பலன்களைத் தரும். இந்த நிலைகள் இலக்கினத்திற்கு மட்டுமல்ல சந்திரனுக்கு எட்டு என்று இருந்தாலும் பொருந்தும் .
இன்னொரு சூட்சும நிலையாக ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி கெட்டு அல்லது முற்றிலும் வலுவிழந்த நிலையில் இருந்து இராகு கேதுக்கள் இலக்கினாதிபதியோடு சம்பந்தப்படாமலேயே இலக்கினத்தில் இருக்கும் நிலையில் நிழல் கிரகங்களின் தசை நடைபெற்றால் ஜாதகரின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் நாசமாக்கும்.
இலக்கினாதிபதி பாப கிரகங்களோடு இணைந்து அவர்களது பிடியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
மேலும் இலக்கினத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் இராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை இராகு பகவான் மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.
மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாப கிரகமாக இருந்தாலோ இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்.